நடிகர் சமுத்திரக்கனியின் மகனை பார்த்திருக்கீங்களா?… பார்ப்பதற்கு அப்படியே தந்தையை உரிச்சு வச்சிருக்காரே… வைரலாகும் புகைப்படம் இதோ…

நடிகர் சமுத்திரக்கனி தனது மகனுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகரும்  இயக்குனருமான சமுத்திரக்கனி அவர்கள். இவருடைய திரைப்படங்கள் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை கொண்ட படமாக தான் இருக்கும். இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களிலும் பணியாற்றி வருகிறார்.

   

2003 ஆம் ஆண்டு ‘உன்னை சரணடைந்தேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதை ஆசிரியராக பணியாற்றி சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது முதல் படத்திலேயே ‘தமிழக அரசின் சிறந்த கதை ஆசிரியருக்கான விருதை’ பெற்றார். தற்பொழுது 46 வயதாகும் சமுத்திரக்கனி இயக்குனர் பாலச்சந்திரன் அவர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றினார்.

இதை தொடர்ந்து இவர் நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா, நாடோடிகள் 2 என 10 திரைப்படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார். மக்களுக்குத் தான் சொல்ல நினைக்கும் கருத்துக்களை தரமான படங்கள் தெரிவித்துக் கொண்டு வருகிறார். இயக்கத்தையும் தாண்டி பல்வேறு படங்களில் வில்லன், ஹீரோ என தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் தற்பொழுது அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘துணிவு’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அதே போல் தனுஷ் உடன் வாத்தி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி ஜெயலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில், புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.

இதோ அவரது மகனின் புகைப்படம்….