நடிகை மாளவிகாவின் கணவரை பார்த்திருக்கீங்களா?… இவர் ஒரு பிரபல வில்லன் நடிகரா?… பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள் இதோ…

நடிகை மாளவிகா அவினாஷ் சொந்த வாழ்கை பற்றிய சில சுவாரசிய தகவல்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆறு, ஜே ஜே, ஆதி, ஜெயம் கொண்டான் போன்ற படங்களில்  குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா அவினாஷ். இவர் தமிழில் மட்டுமல்ல கன்னடத்திலும் பிரபல நடிகையாக வலம்வந்தார். நடிகை மாளவிகாவின் சொந்த  வாழ்க்கையை பற்றி பார்க்கும் பொழுது, இவர் 1976ல் தமிழ் குடும்பத்தில் பிறந்தவர்.

   

அப்பாவின் பெயர் கணேசன். அம்மாவின் பெயர் சாவித்திரி. அப்பா வங்கி ஊழியராக பணிபுரிந்தவர். அதேபோல இவரின் அம்மா சாவித்திரி ஒரு பிரபல பாடகி. அத்துடன் கிளாசிக்கல் டான்ஸர் ஆகவும் இருந்துள்ளார். தனது அம்மாவை தொடர்ந்து இவர் பரதநாட்டியத்தை கற்றுக் கொண்டா.ர் இவர் நடிப்பிற்கும் அப்பாற்பட்டு ஒரு சிறந்த பரதநாட்டிய கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார்.

5 வயதிலேயே  நாட்டியக் கலையை கற்க ஆரம்பித்தவர். இதைத் தொடர்ந்து 9 வயதில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் நடிப்பில் மட்டுமில்லாது படிப்பிலும் சிறந்து விளங்கியவர். சினிமாவில் பல நடிகர்களும் நடிகைகளும் படங்களில் ஒன்றாக நடித்து பின்பு காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொள்வார்கள்.

அந்த வரிசையில் திருமணம் செய்து கொண்டவர் தான் நடிகை மாளவிகா. இவர் அவினாஷ் என்ற பிரபல வில்லன் நடிகரை திருமணம் செய்து கொண்டார்.  2001ல் அவினாஷ் மற்றும் மாளவிகாவிற்கு காதல் ஏற்பட்டு பின்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் இருவரும் நடிகர்கள் என்பது பல ரசிகர்களுக்கு தெரியும் ஆனால் கணவன் மனைவி என்பது ஒரு சில ரசிகர்களுக்கு மட்டுமே தெரியும்.

இதைத் தொடர்ந்து நடிகை மாளவிகா தற்பொழுது கே ஜி எஃப் படத்தில் நடித்து உலக அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது வரை இவர்கள் இருவருமே குணச்சித்திர வேடங்களில் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகின்றனர். நடிப்பினை தொடர்ந்து மாளவிகா 2013ல் பாரதி ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். சமுதாயத்திற்காகவும் பல அறப்பணிகளை செய்துள்ள, நடிகை மாளவிகா இன்றைய தலைமுறை பெண்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.