குடும்பத்தோடு இணைந்து குத்தாட்டம் போட்ட நடிகை ராதிகா…  வைரலாகும் வீடியோ… நீங்களே பாருங்க…

நடிகை ராதிகா தனது குடும்பத்தோடு இணைந்து இலங்கையில் நடைபெற்ற உறவினரின் திருமணத்தில் நடனமாடிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரையுலகில் 80களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர்களில் ஒருவர்தான் நடிகை ராதிகா. இவர் எம்ஆர் ராதாவின் மகள் என்று அடையாளத்தோடு சினிமாவில் வாரிசு நடிகையாக நுழைந்தார். இதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான இவர், தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார்.

   

காமெடி, ஆக்க்ஷன், திரில்லர் என அனைத்து கதைக்களங்களிலும் பல திரைப்படங்களில் நடித்து அசத்தியவர். சின்னத்திரையில் இருந்து நடிகைகள் வெள்ளித்திரையில் நுழைவதை நாம்  கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நடிகை ராதிகா வெள்ளித்திரையின் உச்சத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது சின்னத்திரையிலும் கால் பதித்து அசத்தினார்.

இவர் சின்னத்திரையில் நடித்த சீரியல்களின் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். இவர் நடிப்பில் வெளிவந்த பல சீரியல்கள் ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து நடிகை ராதிகா ராடன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல ஹிட்டான சீரியல்களை தயாரித்தும் சாதனை படைத்தார்.

நடிகை ராதிகா நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நடிகை ராதிகா தனது உறவினரின் திருமணத்திற்காக தற்பொழுது இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு நடிகை ராதிகா தனது குடும்பத்தோடு இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

வைரலாகும் அந்த வீடியோ இதோ….