கேரளாவில் உள்ள நடிகை பூர்ணாவின் பிரம்மாண்ட வீட்டை பாத்துருக்கீங்களா?… அவரே வெளியிட்ட ஹோம் டூர் வீடியோ… வியப்பில் ரசிகர்கள்…

தமிழில் இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படத்தில் அறிமுகமானவர் நடிகை பூர்ணா. தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பிரபலமானார். மலையாள திரையுலகில் தான் இவர் முதன் முதலில் அறிமுகமானார். நடிகை பூர்ணா முறையாக நடனம் பயின்றவர்.

   

இவரின் இயற்பெயர் ஷாம்னா காசிம். திரைப்படங்களுக்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டார். தமிழில் இவர் கொடைக்கானல், ஆடு புலி, வித்தகன், வேலூர் மாவட்டம், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அவரது தோழியாக வி கே சசிகலா கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். தமிழில் அவ்வப்போது தலை காட்டும் பூர்ணா தெலுங்கில் பல திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். தமிழில் பெரிய இடைவெளிக்குபின் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

கேரளாவை சேர்ந்த இவர்  சானித் ஆசிப் அலி எனும் தொழில் அதிபரை இஸ்லாமிய முறைப்படி சில மாதங்களுக்கு முன் திருமணம் கொண்டார்.சில நாட்களுக்கு முன் நடிகை பூர்ணா தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து இவரது வளைகாப்பு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுது ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை பூர்ணா. இவர் தற்பொழுது  youtube சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். தற்போது கேரளாவில் உள்ள தனது வீட்டின் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை பூர்ணா. தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

வைரலாகும் அந்த வீடியோ இதோ…