நந்தாவின் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா?….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…. உங்களுக்காக இதோ…

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்தான் நடிகர் நந்தா.

   

அதன் பிறகு இவர் மௌனம் பேசியதே திரைப்படத்தை தொடர்ந்து புன்னகை பூவே, கோடம்பாக்கம், அதிதி, அகரம், ஈரம், வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பரிச்சயமானார்.

கோவை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் பொள்ளாச்சியை சேர்ந்தவர். அது மட்டும் இல்லாமல் திமுக முன்னாள் அமைச்சர் மு கண்ணப்பன் அவர்களின் பேரன் ஆவார்.

தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நண்பனாக நடித்த இவர் ஈரம் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

அதைத்தொடர்ந்து வானம் கொண்டாட்டம் திரைப்படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்திருப்பார். இவர் நடிகர் விஷாலின் நெருங்கிய நண்பரும் கூட .

20 வருடங்களாக சினிமாவில் இருந்தாலும் விரல் விட்டு என்னும் அளவிற்கே திரைப்படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் அந்த திரைப்படங்கள் அனைத்தும் ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்திருந்தது.

இவர் ஜீ தமிழ் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். சர்வைவரில் தனது திறமைக்காக கிளாடியேட்டர் என்ற புனைப்பெயரை பெற்றார்.

இவர் ஜூலை 17ஆம் தேதி 2013 ஆம் ஆண்டு கோயம்புத்தூரை சேர்ந்த வித்யரூபா என்ற பெண்ணை திருமணம் முடித்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இவர் சினிமாவில் மட்டுமில்லாமல் சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். அதாவது மாயத்திரை, பிரேமி, இரு துருவம் போன்ற வெப் சீரிஸ்க்களில் நடித்திருக்கிறார்.

நந்தா ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். சில கிரிக்கெட் லீக்குகளில் விளையாடியுள்ளார். இவர் ஒரு குரல் வழி கலைஞர், கதாபாத்திரங்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார்.

இவர் சமீபத்தில் இரு துருவம் என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார். இந்த வெப் சீரியஸ் மக்களிடையே மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதுமட்டுமில்லாமல் இவர் நடிகர் ரமணா உடன் இணைந்து ராணா என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார்.

இந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தான் சமீபத்தில் விஷால் நடிப்பில் லத்தி திரைப்படம் உருவானது.

இவர் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மனைவி குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.