
பிரபல தொகுப்பாளினியான அர்ச்சனா கடந்த 1999-ஆம் ஆண்டு ஜெயா டிவியில் தொகுப்பாளினியாக தனது திரை பயணத்தை ஆரம்பித்தார்.
பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான காமெடி டைம் நிகழ்ச்சி மூலம் அர்ச்சனா பிரபலமானார்.
சுமார் 7 வருடங்கள் இளமை புதுமை காமெடி டைம் என்ற இரு நிகழ்ச்சிகளையும் அர்ச்சனா தொகுத்து வழங்கினார்.
பின்னர் கடந்த 2008-ஆம் ஆண்டு ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார்.
சுமார் 25 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக அர்ச்சனா பயணித்துக் கொண்டிருக்கிறார்.
அர்ச்சனாவின் மகள் சாரா வினித் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் படங்களிலும் நடித்து வருகிறார்.
அர்ச்சனாவும் சாராவும் இணைந்து நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் நடித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அர்ச்சனா தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சொகுசு காரை வாங்கினார்.
அதன் ஆரம்ப விலை 77 லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அர்ச்சனாவின் பழைய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
அதனை பார்த்த ரசிகர்கள் தொகுப்பாளினி அர்ச்சனாவா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.