
பிரபல நடிகர் ரோபோ சங்கர் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த பிரபலங்களின் புகைப்படங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் மிமிக்ரி மற்றும் காமெடி மூலமாக பலரையும் சிரிக்க வைத்து வந்தவர் நடிகர் ரோபோ சங்கர்.
சின்னத்திரையில் கிடைத்த அங்கீகாரத்தின் மூலமாக வெள்ளித்திரையில் பல நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி நடிகர் ரோபோ சங்கர் அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.
கடைசியாக லெஜெண்ட் சரவணா நடிப்பில் வெளிவந்த லெஜெண்ட் படத்தில் ரோபோ சங்கர் கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதன் பிறகு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சில நாட்கள் மருத்துவமனையிலும் வீட்டிலும் ஓய்வெடுத்து வந்தார்.
சிறு பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்திலும் ரோபோ சங்கர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரது ஒரே மகளான இந்திரஜா ரோபோ சங்கருக்கு சமீபத்தில் தனது சொந்த ஊரான மதுரையில் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடத்தி வைத்தார்.
இவரது மகள் இந்திரஜாவும், தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பிகில், விருமன் உள்ளிட்ட படங்களில் இவர் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் இந்திரஜாவுக்கும் கார்த்திக் என்பவருக்கும் பெற்றோர்கள் சம்பந்தத்துடன் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக கமலஹாசன் முதல் சிவகார்த்திகேயன் வரை, விஜய் சேதுபதி,பார்த்திபன், கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிருத்விராஜன், ராமராஜன், தம்பி ராமய்யா, சுரேஷ் சக்ரவர்த்தி, சுப்பு பஞ்சு, செளந்தர்ராஜா, மாஸ்டர் மகேந்திரன், கலா மாஸ்டர்,
இயக்குனர்கள் S. P. முத்துராமன், லிங்குசாமி, ஐசரி கணேக்ஷ், நடிகைகள் அம்பிகா, ரேகா, அதிதி சங்கர், நளினி , திவ்யதர்க்ஷனி உள்ளிட்டு ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..