ஜிம்மில் சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் ஜோதிகா…. ஒருவேல இதுதான் Couple Goal ஆ… வைரல் போட்டோஸ்…!!! 

நடிகை ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் சேர்ந்து ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுத்தது. அது மட்டும் இல்லாமல் சூர்யாவின் கதாபாத்திரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூர்யா அவர்களின் மனைவியான ஜோதிகா இவரும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தவர்.

குடும்பம், குழந்தைகள் என வாழ்ந்து வந்த இவர் தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து சூப்பர் சூப்பர் படங்களில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகை ஜோதிகாவும் சூர்யாவும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் தனி கவனம் செலுத்துபவர்.

நடிகை ஜோதிகாவும் சூர்யாவும் தற்போது மும்பைக்கு இடம்பெயர்ந்து இருக்கிறார்கள். அங்கு சென்றதிலிருந்து தான் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தன் கணவருடன் சேர்ந்து ஜிம்மொன்றுக்கு சென்று அங்கு ஒர்க் அவுட் செய்துள்ளனர். இருவரும் சேர்ந்து மிக அழகாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று கூறி வருகிறார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ஜோதிகா பாலிவுட் படமான சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் சூப்பர் ஹிட்டானது.

ஜோதிகாவின் பாலிவுட் கம்பேக் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்தடுத்து ஹிந்தி திரைப்படங்களின் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் நடிகர் சூர்யா அடுத்த திரைப்படத்திற்காக தனது உடலை மெருகேற்றி வருகிறார் எனவும் கூறி வருகிறார்கள்.