
கை விரல்களில் நாம் நெட்டி எடுக்கும் போது, சடக் என்று ஒரு சத்தம் வரும். மேலும், ஒரு முறை நாம் நெட்டி எடுத்துவிட்டால் உடனே நம்மால் மீண்டும் எடுக்க முடியாது. அது ஏன்? என்று பார்ப்போம். அதாவது, நம் விரல்களில் மடங்கும் இடத்தில் 2 எலும்புகளுக்கு நடுவில் synovial membrane என்ற பகுதி இருக்கிறது.
விரல்களின் 2 எலும்புகளும் மடங்கி விரியும் போது உராய்வு ஏற்படும். இதனால் தேய்மானம் உண்டாகிறது. அதனை குறைப்பதற்காக தான் இடையில் உள்ள synovial membrane-ளிருடந்த்து synovial fluid என்ற திரவம் சுரக்கும். இதில், ஹைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்கள் கரைந்து இருக்கும்.
நாம் விரலை மடக்கும் போது, synovial fluid-ல் இருக்கும் வாயுக்களால் நிறைய குமிழ்கள் உருவாகும். அந்த வாயுக்களால் தான் நெட்டி எடுக்கும் போது சத்தம் வருகிறது. இந்த வாயுக்களின் குமிழ்கள் சரியாகி பழைய நிலைக்கும் வருவதற்கு 15 முதல் 20 நிமிடங்கள் ஆகிறது. அதனால் தான் நெட்டி எடுத்தவுடன் மீண்டும் உடனே நம்மால் எடுக்க முடியவில்லை.