மசூதிக்கு அடியில் மறைந்திருந்த ராமர் கோவில்… கண்டுபிடித்ததே முஸ்லீம் தான்… மறைக்கப்பட்ட ஆராய்ச்சி….!

மசூதிக்கு கீழே ராமர் கோவில் புதைந்து கிடப்பதை கண்டுபிடித்தது KK மொஹம்மது என்கிற இஸ்லாமிய தொல்பொருள் நிபுணர். 1976- ஆம் வருடத்தில் தொல்பொருள் குழுவினர் அயோத்தியில் 2 மாதங்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்ட போது, அவர் அந்த குழுவில் இருந்திருக்கிறார். மசூதியின் சுவர்களில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட 14 கோவில் தூண்கள் கிடைத்திருக்கிறது.

   

வாலியையும், 10 தலை ராவணனையும் வதம் செய்த விஷ்ணுவிற்கு இந்த கோவில் நிர்ணயிக்கப்படுகிறது என்ற கல்வெட்டுகள் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. 263 கோவில் சார்ந்த பொருட்கள் அங்கு கிடைத்திருக்கிறது. KK மொஹம்மது இருந்த Archaeological survey of india என்ற குழுவில் 131 தொல்பொருள் நிபுணர்கள் இருந்துள்ளனர். அதில் 51 பேர் இஸ்லாமியர்கள்.

இவர்களின் ரிப்போர்ட்டை ஆராய்ந்து பார்த்து தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால், இப்டி ஒரு ஆராய்ச்சியே நடைபெறவில்லை என்று கம்யூனிஸ்ட் வரலாற்று ஆசிரியர்களை கொண்டு தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டது. ஆராய்ச்சிகள் மீதே சந்தேகம் எழுந்ததால் சுமூகமாக நீதிமன்றத்தில் தீர வேண்டிய பிரச்சனை இந்து முஸ்லீம் கலவரமாக வெடித்துவிட்டது என்று KK மொஹம்மது கூறியிருக்கிறார்.