
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் கமலஹாசன். இவரை வருது ரசிகர்கள் உலகநாயகன் என்று செல்ல பெயரால் கொண்டாடப்படுகிறார்கள். இவர் ‘களத்தூர் கண்ணம்மா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார் குழந்தை நட்சத்திரமாக மற்றும் பல படங்களில் இவர் நடித்துள்ளார். அதை தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பத்தில் இருந்து இன்று வரை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பேன் பெற்றுள்ளார்.
தற்போது இவர் இந்தியன் 2, கல்கி, KH 233, KH 234 படங்களிலும் ,இன்னொரு பக்கம் பிக் பாஸ் சீசன் 7 தொகுத்து வழங்கி வருகிறார்.சினிமா மற்றும் பிக் பாஸில் அரசியல் என்ன ஆல் கவுண்டர் ஆக இருந்து வருகிறார். இவருக்கு பெயரில் பின்னால் இருக்கும் ‘ஹாசன்’ சில நேரங்களில் இவரது பெயரை கமல் ஹாசன் என்றும் உச்சரிக்கப்பட்டது கமல் மட்டுமின்றி அவர் அண்ணன் பெயரும் சாருஹாசன், சந்திரஹாசன் என கமலின் குடும்பத்துக்கு திரையுலகில் ‘ஹாசன் ஃபேமிலி’ என்ற புனைப் பெயரும் இருந்தது.
சாருஹாசன், சந்திரஹாசன், கமல்ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து ‘சு’ஹாசி’னி, அனு’ஹாசன்’ என அடுத்த தலைமுறையினருக்கும் ‘ஹாசன்’ என்ற பெயர் வரும்படி கமலின் அப்பா கவனம் செலுத்தியுள்ளார்.இதைப்பற்றி நடிகர் கமலஹாசனின் அண்ணன் சாருஹாசன் ஒரு பெட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார்.
ஸ்ரீனிவாச ஐயங்கார் என்பவரின் மகன்களாக எங்களது பெயரில் ஹாசன் இருப்பதற்கு அப்பாவின் இஸ்லாமிய நண்பர் தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்து, முஸ்லீம் ஒற்றுமை அதிகம் விரும்பி கொண்டிருக்கும் கமலின் அப்பாவுக்கு ஹாசன் என்ற ஒரு முஸ்லிம் நண்பர் இருந்தார். அவர் நண்பர் மட்டுமல்ல நல்ல குருவாகவும் அப்பாவை வழிநடத்தினாராம்.
இதனால் தனது நண்பரை நண்பரும் குருவமான ஹாசனின் பெயரை மகன்களுக்கு சூட்ட வேண்டும் என்று தன் மகன்களுக்கு ஹாசன் என்று பெயர் வைத்துள்ளார் அப்படியே தான் தங்களது குடும்பத்திற்கு ஹாசன் பேமிலி என்று அடைமொழி வந்தது என்று சாருஹாசன் கூறியுள்ளார். நடிகர் கமல் பெயருக்கு பின்னால் இருக்கும் ஆசன் என்பவர் ஒரு இஸ்லாமிய நண்பர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.