லியோ பட ட்ரைலர் பாஜக எம்எல்ஏ வெளியிட்ட புகைப்படம்..!தற்போது இணையத்தில் வைரலாகிறது..?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் படம் ‘லியோ’.இப்படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்

இப்படத்தில் நடிகை திரிஷா ,அன்ஜுன்,  சஞ்சய் தத், பிரியா ஆனந்த்,  மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ மேனன், சாண்டி மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடை பெற்று   வருகிறது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ  சான்றிதழ் வழங்கியுள்ளது.

   

நேற்றைய தினம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது இந்த ட்ரெய்லரானது ரசிகர்களை கவர்ந்து வெளியாகி ஒரு சில மணி நேரங்களிலேயே 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது .இந்நிலையில் இந்த ட்ரெய்லரை எம் எல் ஏ வானதி சீனிவாசன் தனது வீட்டில் பார்த்துள்ளா.ர் இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.