மறைந்த நடிகர் மயில்சாமி முக்கிய புள்ளி ஒருவரின் சம்மந்தியா?… யாருன்னு தெரியுமா?… இதோ பாருங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. இவர் நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என பன்முகத்திறமைகளோடு திரையுலகில் வலம் வந்தவர். மக்கள் மத்தியில் தனது காமெடியின் மூலம் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.

   

விஜய், அஜித், ரஜினி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார் மயில்சாமி. இவர் தமிழ் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக உடன்பால் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகர் மயில்சாமி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகியே அதிர்ச்சியடைய வைத்தது.

நடிகர் மயில்சாமிக்கு யுவன் மற்றும் அன்பு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரின் இரண்டு மகன்களும் தற்போது சினிமாவில் ஹீரோக்களாக நடித்து அசத்தி வருகின்றனர். மூத்த மகன் அன்பு இவர் நடிப்பில் ‘அல்டி’ திரைப்படம் 2020இல் ரிலீசானது.

இளைய மகன் யுவன் இவரும் தற்பொழுது சினிமாவில் நடித்துக் கொண்டு வருகிறார். இளைய மகன் யுவன் ‘தண்டகாரண்யம்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கிறார்.

நடிகர் மயில்சாமியின் மகன் அன்பிற்கும், துணை சபாநாயகர் பிச்சாண்டியின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் 2019ல் திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் திரைபிரபலங்களும் அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர். திருமணம் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது .தற்பொழுது இந்த திருமண புகைப்படம் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.