IVF சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பிரபல நடிகை ரேவதியின் மகள் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘மண்வாசனை’ படம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. 80களில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், கார்த்தி, மோகன், பிரபு போன்றவருடன் நடித்து தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் , மலையாளம் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார்.
நடிகையாக மட்டுமின்றி பல்வேறு படங்களை இயக்கியும் உள்ளார். இவர் நடிப்பில் வெளிவந்த தேவர் மகன், மகளிர் மட்டும், புன்னகை மன்னன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சினிமா துறையில் பல சாதனைகளை புரிந்து இருந்தாலும், இவருடைய திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.
இவர் 1986இல் ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திர மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். திருமணமாகி 27 வருடங்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சுரேஷ் மேனனுக்கும் ரேவதிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2002ல் விவாகரத்து பெற்றனர்.
இந்நிலையில் நடிகை ரேவதி சோதனை குழாய் மூலம் கர்ப்பமாகி ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ‘மஹி’ என்று பெயர் வைத்தார். தற்பொழுது அவர் தன் குழந்தையை நன்றாக கவனித்து வருவதாகவும், அவள் தான் தன்னுடைய உலகம் என்றும் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். தற்பொழுது நடிகை ரேவதியின் மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.