
ஜெயிலர்
நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படம் தற்போது வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், தற்போது வரை 375.4 கோடி ருபாய் வசூல் செய்து இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றி விழா இன்று நடந்தபோது, நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து இப்படத்தின் வெற்றிக்கு நன்றி கூறி இருக்கின்றனர்.
மிர்னா மேனன்
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக மிர்னா மேனன் நடித்துள்ளார். இவரது நடிப்புக்கு தற்போது இணையத்தில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வரும் சூழலில், இவரை பற்றிய பதிவுகளையும் சோசியல் மீடியாக்களில் பார்க்க முடிகிறது.
தமிழ், மலையாள திரைப்பட நடிகையான இவர் தமிழில் களவாணி, மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இவர் தமிழில் அதிதி மேனன் என்ற பெயரில் படங்களில் நடித்து இருக்கிறார். அப்போது நடிகர் அபி சரவணன் என்பவரை காதலித்து ரகசிய திருமணம் செய்து கொண்டார் எனவும் ஆனால் இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர் எனவும் தெரிகிறது. மேலும் இவர்களது விவகாரத்து வழக்கும் சில ஆண்டுகளுக்கு முன், நீதிமன்றத்தில் பரபரப்பாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.