அப்படியா..! பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர் படம் வசூல் சாதனை.. இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ரஜினி..!!

ஜெயிலர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆன திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிச்சர்ஸ் தயாரித்தனர். மேலும்  அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோஃப் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது.

இந்நிலையில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம். மாபெரும் வெற்றியடைந்துள்ளது. மேலும் வசூலில் புதிய சாதனைகளையும் படைத்து வருகிறது.

   

பாகுபலி வசூலை அடித்து நொறுக்க வரும் ஜெயிலர்.. இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த ரஜினி | Jailer Will Beats Baahubali Box Office

இண்டஸ்ட்ரி ஹிட்

இந்நிலையில் ஜெயிலர் படம் உலகளவில் இதுவரை ரூ. 500 கோடியை கடந்து வசூல் வேட்டை செய்து இண்டஸ்ட்ரி ஹிட் ஆகியுள்ளதாகவும், விரைவில் உலகளவில் ரூ. 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்த ராஜமௌலியின் பாகுபலி திரைப்படத்தின் வசூலை ஜெயிலர் படம் முறியடிக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.