கன்னட திரைத்துறையில் Jambada Hudugi என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் யாஷ். இந்த சினிமாவில் நடிப்பதற்கு முன் சீரியலில் நடித்துக்கொண்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும், பல கன்னட படங்களில் நடித்துள்ளார் நடிகர் யாஷ். மேலும், கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த “கே.ஜி.எப்” திரைப்படம் இந்தியளவில் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.
இதன்பின், கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவந்த “கே.ஜி.எப் 2 ” திரைப்படம் மக்களிடத்தில் செம்ம ரீச் ஆனது என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இன்றுவரை இந்த திரைப்படம் சுமார் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையை படைத்துள்ளது, என்று சொல்ல்லாம்.
இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ராதிகா பண்டிட் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேலும், தற்போது இவர்கள் இருவருக்கும் இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் யாஷ் – ராதிகாவின் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது. இதோ அவருடைய சில திருமண புகைப்படங்கள்…