ராமரே வந்து இறங்கிட்டாருப்பா… சாமி வந்து ஆடிய கங்கனா ரணாவத்… வைரலாகும் வீடியோ…!

நேற்றைய தினம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் வெகு பிரம்மாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அது குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது. மேலும், தொலைக்காட்சிகளில் நேரலையும் செய்யப்பட்டது. உலகெங்கும் உள்ள பல ஊர்களை சேர்ந்த மக்கள் அங்கு சென்று ராமரை வழிபட்டனர்.

   

இந்நிலையில், நடிகையும் பாஜக உறுப்பினருமான கங்கணா ரணாவத் நேற்று கும்பாபிஷேகத்தில் பங்கேற்றுள்ளார். தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்த தாம் தூம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

பாலிவுட் நடிகையான இவர் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் உணர்ச்சிவசப்பட்டு பொங்கி ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம் என்று மிக சத்தமாக கோஷமிட்டிருக்கிறார். தொடர்ந்து அவர் மெய் சிலிர்த்து போய் கோஷமிட்டு கொண்டே இருக்கும் வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.