திடீரென ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய முக்கிய பிரபலம்… ‘நான் வரமாட்டேன் இனி வரவே மாட்டேன்’… அவரே வெளியிட்ட பதிவு… ஷாக்கான ரசிகர்கள்…

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களமிறங்கி ரசிகர்களை  கவர்ந்தவர் மணிமேகலை. இவர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். விஜே மணிமேகலை நடன இயக்குனரான ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார்.

   

இரு குடும்பத்தினரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் 2017 ல் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது வரை இவர்கள் சிறந்த காதல் ஜோடியாக விளங்கி வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மிகப் பிரபலமானார் மணிமேகலை.  குக் வித் கோமாளி ஷோவில் தற்போது முன்னணி கோமாளி அவர் தான். அவரை கொண்டாடும் ரசிகர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.

28 வயதான மணிமேகலை திருப்பூரில் பிறந்தவர். தனது முதுகலை பட்டப்படிப்பை சென்னையில் பயின்றவர். நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இணைந்தார்.

மணிமேகலையும் அவரது கணவரும் இணைந்து நடத்தி வரும் யூட்யூப் சேனலுக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் வாழ்வில் பல கஷ்டங்களையும், சவால்களையும் சந்தித்துள்ளார் மணிமேகலை.

தற்பொழுது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வந்தார். இந்நிலையில் ‘திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு தான் விலகப் போவதாகவும்,

இதேபோன்று தனக்கு எப்பொழுதும் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்பொழுது இப்பதிவு இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த வைரல் பதிவு….

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)