சூப்பர் ஜோடியாக ஜொலிக்கும் அஜித் – ஷாலினியின்…. காதல் பொங்கும் கலக்கலான புகைப்படங்கள் இதோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்.

   

இவர் 1990 ஆம் ஆண்டு என் வீடு என் கணவர் என்ற திரைப்படத்தில் பள்ளி சிறுவனாக சிறிய கதாபாத்திரத்தில் சினிமாவிற்குள் நுழைந்தார்.

பின்னர் மூன்று வருடங்களுக்கு பிறகு 1993ஆம் ஆண்டு அமராவதி திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதன் பிறகு இவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில் முன்னணி நடிகராக திகழ்ந்தார்.

பின்னர் 1999 ஆம் ஆண்டு சரவணன் இயக்கிய அமர்க்களம் திரைப்படத்தில் நடித்த போது அதில் ஹீரோயினியாக நடித்த ஷாலினி மீது அஜித்திற்கு காதல் ஏற்பட்டது.

அதே வருடம் ஷாலினியிடம் தனது காதலை சொல்லிய அஜித் பெற்றோர்களிடம் பேசி 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

தென்னிந்திய மொழி சினிமாக்களில் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருந்து பிறகு ஹீரோயினியாக வளர்ந்தவர் தான் ஷாலினி.

 

இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார்.

இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இவர்களுக்கு திருமணம் ஆகி கிட்டதட்ட 22 வருடங்கள் நிறைவடைந்து தற்போது 23 வது வருடம் தொடங்கிவிட்டது.

அஜித் தற்போது முன்னாடி நடிகராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்.

இவரின் நடிப்பில் அடுத்ததாக ஏ கே 62 திரைப்படம் உருவாகி வருகிறது.

மறுபக்கம் ஷாலினி குழந்தைகளையும் வீட்டையும் கவனித்து வருகிறார்.

இந்நிலையில் அஜித் மற்றும் ஷாலினியின் திருமண நாள் கொண்டாட்டம் குறித்த ஸ்பெஷல் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.