
இந்தியா விடுதலை பெற்ற பிறகு மொழிவாரியாக பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அந்த சமயத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுலா தளமாக திகழ்ந்ததால், கேரளா கன்னியாகுமரியை தங்களோடு இணைக்க வேண்டும் என்று கூறியது. அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் சாதி பிரச்சனைகளும் அதிகம் இருந்ததால், அதனை பெரிய அளவில் யாரும் மீட்டெடுக்க விதைக்கவில்லை.
அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் சாதி பிரச்சனை அதிகமாக இருந்தது. நீதிமன்றத்தில் கூட தாழ்த்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கென்று தனியாக தண்ணீர் பானை வைக்கப்பட்டிருந்தது. பணியில் சேர்ந்த முதல் நாளே தைரியமாக அனைத்து பானைகளையும் போட்டு உடைத்து ஒரே பானையை வைத்தவர் தான் மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரரான வழக்கறிஞர் மார்ஷல் நேசமணி.
அது மட்டுமல்லாமல், பல போராட்டங்களில் நடத்தியதோடு கன்னியாகுமரியில் 90% தமிழ் மக்கள் தான் உள்ளனர். எனவே, கேரளாவோடு இணைத்தால் அவர்கள் சிரமப்படுவார்கள் என்று வாதாடி, தமிழ்நாட்டோடு கன்னியாகுமரியை சேர்த்த பெருமையும் அவரையே சாரும்.