
1947 ஆம் வருடத்தில் இந்தியா விடுதலை பெற்ற பிறகு இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று இந்தியர்கள் நிம்மதி பெறும் மூச்சு விட்டனர். ஆனால் இந்தியாவிற்குள் பல மாநிலங்களில் எல்லை பிரச்சனை தொடங்கியது. அந்த சமயத்தில் ஏற்றுமதி இறக்குமதியில் முன்னணி வகித்த சென்னை மாநகராட்சியை கைப்பற்ற ஆந்திரா திட்டமிட்டது.
சென்னை தலைநகரை, தங்களது எல்லையோடு இணைக்குமாறு மிரட்டல் விடுத்தது. அப்போது தமிழ் இளைஞர்களை திரட்டி ஆந்திராவிற்குள் நுழைந்து தமிழ்நாட்டை சீண்டினால் தலையை எடுப்போம் என்று போராடி சென்னையை மீட்டெடுத்தவர் மயிலை பொன்னுசாமி சிவஞானம்.
அதன் பிறகு, மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களின் கொடியை ஏற்றி வைத்தவரும் மபொசி எனப்படும் அவர் தான்.