
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, மிகப்பெரிய நாடு, பணக்கார நாடு, என்று பலவற்றை படித்திருப்போம். கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உலகிலேயே மிகச்சிறிய நாடு குறித்து யாருக்காவது தெரியுமா? இரண்டாம் உலகப்போரில் கடலுக்கு அடியில் கைவிடப்பட்ட சின்ன பிளாட்பார்வில் தான் அந்த மொத்த நாடே இருக்கிறது.
அந்த நாட்டில் வாழும் ஒட்டு மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையை கேட்டால் நாம் அதிர்ச்சியடைந்து விடுவோம். வெறும் 27 நபர்கள் மட்டுமே அந்த நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். அதில் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், அந்த நாட்டிற்கு நாம் செல்ல வேண்டும் என்றால் அதற்கு நாம் விசா வாங்க வேண்டும்.
இந்த ஒரு காரணத்துக்காகவே பலரும் வந்த நாட்டிற்கு சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் செல்கிறார்கள். அந்த நாட்டின் பெயர் சீலேண்ட். தங்களை Mircro country-ஆக அந்த நாடு அறிவித்துள்ளது.