என்னங்க சொல்றீங்க… 22 வயது பெண்ணுக்கு 26 குழந்தைகளா?… இது பத்தலயாம்… 105 வேணுமாம்..!

26 வயதான இளம் பெண் ஒருவர் 22 குழந்தைகளுக்கு தாயாக இருப்பது பற்றி அளித்த  நேர்காணல் உலக அளவில் கவனம் பிரபலமடைந்திருக்கிறது.

பொதுவாக குழந்தைகள் என்றாலே அவர்களை வளர்த்து ஆளாக்குவது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவால் தான். அதிலும் தற்போதைய சூழலில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளை வளர்ப்பதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் எனவே ஒரு குழந்தையை போதும் என்று பல தம்பதிகள் முடிவெடுக்கிறார்கள்.

   

இந்நிலையில் இளம் பெண் ஒருவர் ஆச்சரியமூட்டும் வகையில் 22 குழந்தைகளை வளர்த்துவருகிறார். கோடீஸ்வரரான இவரின் கணவர் பல ஹோட்டல்களை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த இளம் பெண் இது பற்றி தெரிவித்ததாவது, தற்போது எனக்கு 22 குழந்தைகள் இருக்கிறார்கள்.

எனக்கு 105 குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்பது தான் இலக்கு என்று கூறி அதிர்ச்சியடைய வைத்திருக்கிறார். 26 வயதான இவருக்கு பிறந்தது ஒரு குழந்தை தான். மீதமுள்ள குழந்தைகள் அனைத்தும் வாடகை தாய் மூலமாக பிறந்திருக்கின்றன.