‘Mrs vinu’ ஆகிய குக் வித் கோமாளி பிரபலம்… இவர் தானா அது?…. வைரலாகும் திருமண புகைப்படம்…. குவியும் வாழ்த்துக்கள்….

குக் வித் கோமாளி பிரபலமான நடிகை ரித்திகா தற்பொழுது தனது திருமண புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா. இது தவிர இவ்வாறு சீரியல் மற்றும் ரியாலிடிஷோக்களிலும் பங்கு பெற்று வருகிறார். இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

   

இவர் இந்நிகழ்ச்சியில் செய்யும் குறும்புகளையும் காமெடிகளையும் ரசிகர்கள் ரசித்து வந்தனர். தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலான  ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இந்த சீரியலில் ரித்திகாவுக்கு மிகவும் அமைதியான கதாபாத்திரம். இந்த தொடரில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் விஷாலுடன் ஜோடி சேர்ந்து ரித்திகா நடித்து வருகிறார். இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் நடிகை ரித்திகா தனது ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறியுள்ளார். ஆம் அது என்னவென்றால் இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் வினு என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தற்பொழுது இவர் தனது திருமண புகைப்படத்தை பதிவு செய்து அதில், ‘Finally… !! MRS.VINU with god’s grace’ என்று பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.