
இணையதளங்களில் வெளிவரும் பல வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும். சில வீடியோக்கள் நமக்கு பொழுதுபோக்காகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். இன்னும் சில வீடியோக்கள் மனதை நொறுக்கும் வகையில் பரிதாபத்தை ஏற்படுத்தி விடும்.
அந்த வகையில், புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்று மொத்தமாக இடிந்து விடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது. காண்போரின் கண்களை குளமாக்கும் அந்த வீடியோவில் புதிதாக கிரஹப்பிரவேசம் செய்யப்பட்டு, புதுமனை புகுவிழா இன்னும் 3 தினங்களில் நடைபெற இருந்த நிலையில் அந்த வீடு மொத்தமாக இடிந்து கீழே விழுந்துவிட்டது. வீட்டின் உரிமையாளர்கள் ரங்கநாதன்-சாவித்திரி தம்பதியும் அவர்களின் உறவினர்களும் அதை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கு முன் பெருவெள்ளம் ஏற்பட்டு பல வீடுகள் இடிந்து விழுந்தது. அந்த வீடியோக்களும் இணையத்தில் வெளிவந்து வேதனையடைய செய்தது. அதேபோல் தற்போது புதுச்சேரியில் உப்பனார் வாய்க்காலில் பள்ளம் தோண்டப்பட்டதால் ரங்கநாதன்-சாவித்திரி தம்பதி புதிதாக கட்டிய 3 மாடி வீடு இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.