மும்பையில் குடியேறிய பூஜா ஹெக்டே ஹாட் சிட்டியில் பிரம்மாண்ட வீடு வாங்கி அசத்திய நடிகை..

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் ஆங்கிலம் , ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர்.இவர் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில்  2012 ஆம் ஆண்டு வெளியானபடம் ‘முகமூடி’. இப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்க வில்லை.தெலுங்கு படங்களில்   கவனம் செலுத்தி வந்தார்.இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப் படங்கள் நடித்துள்ளார்.

   

 

2022 ஆம் ஆண்டு வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார்.ஆனால் இப்படமானது மக்கள் மத்தியில் பல நெகடிவ் விமர்சனங்களை பெற்றது.  மீண்டும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது இவர் நடிப்பில் ஹிந்தியில் ‘தேவா’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே மும்பை பாந்த்ரா பகுதியில் கடற்கரையை பார்த்தபடி, ரூ. 45 கோடி மதிப்புள்ள ஆடம்பர் வீட்டை புதிதாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 4000 சதுர அடி என்றும் இந்த வீட்டில் நீச்சல் குளம், ஜிம், தியேட்டர் என பல விஷயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வீட்டின் மதிப்பு மட்டும் ரூ 45 கோடி என கூறப்படுகிறது. மும்பையின் நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த வீட்டில் விரைவில் குடியே இருக்கிறார்என்ற தகவல் வெளியாகியுள்ளது.