தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு… ‘லியோ’ திரைப்படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திரிஷா…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்து வருகிறது.  தற்பொழுது தளபதி இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

   

‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு இவர்களது வெற்றி கூட்டணி தற்பொழுது மீண்டும் இணைந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் லியோ திரைப்படத்தை எதிர்பார்த்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம், மிஷ்கின் , அர்ஜுன், மன்சூர் அலிகான், அபிராமி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பதும் குறிப்பிடத்தக்கது. தளபதிக்கு ஜோடியாக நடிகை திரிஷா  நடித்துள்ளார். வரும் ஆயுத பூஜையையொட்டி அக்டோபர்  மாதம் 19 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் லியோ திரைப்படத்தை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நேற்று தளபதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். பிரபலங்கள் பலரும்  அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அந்தவகையில் நடிகை திரிஷா நடிகர் விஜய் உடன் லியோ சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இப்புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். இதோ அந்த வைரல் புகைப்படம்…