வெள்ளையர்களை கொலை நடுங்கவைத்த இரண்டு வீரத்தமிழர்கள்.. துரோகத்தால் வீழ்த்தப்பட்டது எப்படி..?

நம் நாட்டை வெள்ளையர்கள் ஆண்ட சமயத்தில் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் குறைவாக கருதியுள்ளனர். எளிதில் அவர்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்த ஆங்கிலேயர்கள் தமிழர்கள் இரண்டு பேரை கண்டு மிரண்டுபோயுள்ளனர்.

   

நோக்கு வர்மம் உட்பட பல கலைகளை மக்களுக்கு கற்றுக்கொடுத்தது மட்டுமல்லாமல் புலியுடன் நேருக்கு நேராக மோதி கையாலேயே குத்தி கிழித்து சண்டையிட்டதை பார்த்து பயந்துபோனார்கள்.

ஏனெனில், தூரத்தில் நின்று துப்பாக்கியால் புலியை சுட்டுக்கொல்வது தான் ஆங்கிலேயர்களின் பழக்கம். மேலும், இரும்பு நாணயத்தை கையால் வளைப்பது, வலது கையால் வளரியை எரிந்தால், பல கிலோமீட்டர் தொலைவு சென்று எதிராளியை தாக்கி விட்டு சரியாக மீண்டும் அவரின் இடது கையை வந்து அடைவதை பார்த்து ஆடிப்போனார்கள்.

இரண்டு சகோதரர்களையும் பார்க்கும்போதெல்லாம் பயந்து போன வெள்ளைக்காரன், அவர்களோடு நேருக்கு நேராக போராட துணிச்சல் இல்லாமல், அவர்கள் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்தி தூக்கிலிட்டு கொலை செய்தான். அந்த இருவர் வேறு யாருமில்லை, தமிழர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய 17-ஆம் நூற்றாண்டில் சிவகங்கையை ஆண்ட மன்னர்கள் பெரிய மருது மற்றும் சிறிய மருது தான்.