ஷூட்டிங் இல்லாத சமயத்தில்…. அருண் விஜய் இப்படி தான் இருப்பாரோ?… வைரல் புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். இவர் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் வீட்டில் தனது இல்லத்தில் எப்படி நேரத்தை செலவிடுவார் என்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

தமிழ் சினிமாவில் பலம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகன் அருண் விஜய். வாரிசு நடிகரான இவர் முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

வாரிசு நடிகர்கள் பெரும்பாலும் முதல் அல்லது இரண்டாவது படத்திலேயே பீல்ட் அவுட் ஆவது வழக்கம். ஆனால் இவர் தற்போது வரை தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

மக்களின் ஆதரவால் சினிமாவில் நீடித்து வரும் வாரிசு நடிகர்களில் ஒருவராக இருந்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் நடிகர் அஜித் உடன் இணைந்து என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக இவருக்கு மேலும் பேரும் புகழும் கிடைத்தது.

தொடர்ந்து அதற்குப் பிறகு வெளியான திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய அருண் விஜய் அவ்வபோது தான் குடும்பத்துடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

சமீபத்தில் கூட அருண் விஜயின் அக்கா மகள் தியாவுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில் அருண் விஜய் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் வீட்டில் தனது குடும்பத்தினருடன் எப்படி நேரத்தை செலவிடுகிறார் என்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்கள் இதோ…