எப்பிடியெல்லாம் ஏமாத்துறாங்க… பறிபோன வீடு… பிரபு தேவா தம்பிக்கு இந்த நிலைமையா…?

கடந்த 2021 ஆம் வருடத்தில் நடன இயக்குனர் மற்றும் நடிகரான பிரபுதேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத்திடம் விக்னேஷ் என்ற நபர் வாடகைக்கு வீடு கேட்டுள்ளார். அப்போது நாகேந்திர பிரசாத், கேர் டேக்கர் தனியார் நிறுவனத்திற்கு இந்த வீட்டை குத்தகைக்கு விட்டிருக்கிறேன் என்றும் அந்த நிறுவனத்திற்கு 25 லட்சம் குத்தகை பணம் செலுத்துங்கள் எனவும் அதன் பின் அந்த நிறுவனத்திடமிருந்து மாதந்தோறும் 36 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.

அதன்படி விக்னேஷும் அந்த வீட்டை குத்தகைக்கு எடுப்பதற்காக 25 லட்சம் ரூபாயை அந்த நிறுவனத்திற்கு கொடுத்திருக்கிறார். அந்த நிறுவனம், திடீரென்று கடந்த ஓராண்டாக நடிகர் நாகேந்திர பிரசாத்திற்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றிவிட்டது. இதனால், நாகேந்திர பிரசாத் அந்த வீட்டில் வாடகைக்கு இருந்த விக்னேஷை உடனே காலி செய்யுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

   

அதற்கு விக்னேஷ், நாங்கள் 25 லட்சம் பணம் கொடுத்துள்ளோம். எனவே வீட்டை காலி பண்ண முடியாது என்று தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு நாகேந்திர பிரசாத் தன் நண்பர்களை வரவழைத்து விக்னேஷ் குடும்பத்தினரை வெளியே அனுப்பி வீட்டை பூட்டி கேட்டில் வெல்டிங் வைத்துவிட்டார்.

இது தொடர்பில் விக்னேஷ் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நாகேந்திர பிரசாத், ஒரு நிறுவனத்திற்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார். அந்நிறுவனம் விக்னேஷிற்கு குத்தகை விட்டுள்ளது. ஆனால், அந்நிறுவனம் நாகேந்திர பிரசாத்திற்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்ததால் குத்தகைக்கு வந்த விக்னேஷும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

குத்தகைக்கு விட்ட நாகேந்திர பிரசாத்தும் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவ்வாறு மோசடியில் இருந்து தப்பிப்பதற்கு குத்தகைக்கு செல்கிறவர்கள் அந்த வீடு சம்பந்தப்பட்டவருடையதுதானா? என்பதை அறிந்து விட்டு செல்ல வேண்டும். மேலும், வீட்டின் உரிமையாளரிடமே நேரடி முறையில் ஒப்பந்தம் செய்து கொள்வது இந்த சிக்கல்கள் வராமல் தடுக்க உதவும் என்று கூறப்பட்டிருக்கிறது.