
சீரியல் நடிகை பிரகதி கடந்த 1994 ஆம் வருடத்தில் இயக்குனர் பாக்கியராஜ் இயக்கியத்தில் வெளிவந்த வீட்டுல விசேஷங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தன் முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களிலேயே அதிக வரவேற்பை பெற்று பிரபல நடிகையானர்.
தமிழில் 20க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாகவும், குணசித்திர நடிகையாக 100க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் நடிகர் சந்தானத்திற்கு தாயாக நடித்திருந்தார். தற்போது சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருக்கும் இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
20 வயதில் இவருக்கு திருமணமான நிலையில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்தார். அதன் பிறகு தன் தாய் வீட்டிற்கு சென்றார். அங்கு சம்பாதிக்காமல் இருப்பதாக அவரின் தாய் கூறவே, கடைகளில் வேலை செய்ய தொடங்கியிருக்கிறார். எதிர்பாராமல், மாடலிங் துறைக்கு சென்ற அவர் நடிகையாகிவிட்டார்.
இளம் வயதிலேயே கணவரை பிரிந்த இவர் தன் பிள்ளைகளை வளர்ப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். தற்போது பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்து விட்டனர். இவரிடம் இரண்டாம் திருமணம் பற்றி எப்போது கேட்கப்பட்டாலும், அதில் சிறிதும் விருப்பமில்லை என்றே கூறி வந்தார்.
இந்நிலையில் இவர் இரண்டாம் திருமணத்திற்கு தயாராகியுள்ளதாக தகவல் வெளிவந்திருக்கிறது. அதாவது டோலிவுட்டில் ஒரு தயாரிப்பாளர் இவரை காதலிப்பதாக கூறியதாகவும் முதலில் தயங்கியவர் பின் திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது வரை இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.