பொங்களில் மாமனார் மருமகன் மோதலில் இருந்து விலகிய ரஜினி… என்ட்ரி கொடுக்கும் அருண் விஜய்…

தமிழ் சினிமாவை பொறுத்தவரை   பொங்கலை முன்னிட்டு பிரபல நடிகர்களின் படங்கள் வெளிவருவதை வழக்கமாக வைத்துள்ளது. சென்ற ஆண்டு வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.

   

இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் அன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக உள்ளது .நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் மற்றும் நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ்  ஆகிய படங்கள் வெளிவர உள்ளனர்.

 

இந்நிலையில் லைக்கா தயாரிப்பில் ரஜினியின் ‘லால் சலாம்’ படம் வெளிவரும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் திடீரென்று தள்ளிப்போனது இதனால் இப்படத்திற்கு பதிலாக லைக்கா தயாரிப்பில் உருவான அருண் விஜயின்’ மிஷின்’ திரைப்படம் வெளியாகிறது என அறிவித்திருந்தனர்.

ரஜினி படத்திற்கு பதிலாக பொங்கலுக்கு அருண் விஜயின் படம் களம் இறங்கி இறங்கிறது  இந்த வருடம் நான்கு படங்கள் பொங்கல் அன்று வெளியாகுவதால் கண்டிப்பாக இந்த வருடம் ஆரம்பமே வசூல் வேட்டையில் தமிழ் சினிமா பட்டியல் கிளப்ப போகிறது என்று உறுதியாகிறது.