இமயமலை பயணம் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினி…. பலரும் பார்க்காத அன்சீன் புகைப்படங்கள்…

கடந்த 1975 -ஆம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ரகங்கள் படத்தின் மூலமாக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் தனக்கென்ன ஒரு தனி முத்திரை பிடிக்க தொடங்கினர் ரஜினிகாந்த்.

   

இவர் நடிப்பு மற்றும் ஸ்டைல் என அனைத்திற்கும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உலகம் முழுவதும் உள்ளது. தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் கதாநாயகனாக பல திரைப்படங்களில் கலக்கியவர்.

இவரின் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் ரசிகர்கள் அதனை திருவிழா போல கொண்டாடுவது வழக்கம். பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் என்றால் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ரஜினி தான்.

இவரின் பெயரை சொன்னால் சிறு குழந்தைக்கு கூட தெரிந்து விடும். இன்னும் சொல்லப்போனால் ஒரு முறை இவரின் ரசிகர் ஆகிவிட்டால் இறுதிவரை ரஜினியின் ரசிகராக தான் இருக்க முடியும்.

அந்த அளவிற்கு தன்னுடைய நடிப்பு மற்றும் ஸ்டைல் என அனைத்திலும் ரசிகர்களை கட்டிப்போட்டு உள்ளார். இவர் இறுதியாகஇயக்குனர் சிறுத்தை சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தற்போது ரஜினி ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படம் ரஜினியின் 169 படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதே சமயம் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கம் லால் சலாம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும் ரஜினி ஆரம்பத்தில் அடிக்கடி இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இமய மலைக்குச் சென்று தியானம் செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதால் அவர் அடிக்கடி இமயமலை செல்வது வழக்கம்.

இந்நிலையில் நடிகர் ரஜினியின் இமய மலைக்குச் சென்ற போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.