
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் இவர். தமிழ் சினிமாவில் ‘தீரன்’, ‘என்.ஜி.கே’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். இப்போது தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் ‘அயலான்’ படத்திலும் கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்திலும் நடிக்கிறார்.
இது மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலிப்பதாக தனது சமூக வலைதளத்தில் சமீபத்தில் தெரிவித்திருந்தார் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அவர்கள்.
இந்தி, தெலுகு, தமிழ் என பல மொழி படங்களில் நடித்துள்ள இவருக்கு ரசிகர்கள் ஏராளம். பான் இந்திய அளவிற்கு அறியப்படும் ஒரு நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சின் அவர்கள். தற்போது தமிழில் ‘இந்தியன் 2’ படத்திலும் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்தம் வண்ணம் உள்ளன.
சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வரும் இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் கருப்பு நிற உடையில் செம கவர்ச்சியாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சில வைரலாகி ரசிகர்களை சூடேற்றி வருகிறது.