
பெற்றோர்கள் தங்களுக்கு பிள்ளைகளுக்காக பாடுபட்டு உழைத்து சேர்த்து வைக்கிறார்கள். ஆனால், வயதான காலத்தில் அவர்களை ஏமாற்றி வீட்டை விட்டு வெளியேற்றுவது என்பது கொடுமையான விஷயம். இன்று பல முதியோர் இல்லங்கள் இருப்பதற்கு காரணமே பெற்ற பிள்ளைகள் தான் என்பது நிதர்சனமான உண்மை.
பெற்றோர்களுக்கு நடக்கும் இந்த கொடுமை, ஏழை எளிய மக்களில் தொடங்கி பணக்காரர்கள் வரை நடக்கிறது. அந்த வகையில் இன்று முகேஷ் அம்பானியை விட மிகப்பெரிய அளவில் இருந்திருக்கக் கூடிய ஒரு நபர் வாடகை வீட்டில் வசிக்கிறார். அவர் யார்? என்று பார்ப்போம். நம்மில் பலருக்கும் Raymond நிறுவனம் பற்றி தெரிந்திருக்கும்.
ஆடைகள் வாங்குவதில் பலரின் நம்பிக்கையை சம்பாதித்தவர் அந்த நிறுவனத்தின் நிறுவனரான விஜய்பட் சிங்கானியா. இவர் முகேஷ் அம்பானியை விட மிகப்பெரிய பணக்காரராக இருந்தவர். ஆனால், தன் இரண்டாவது மகனை நம்பி மொத்த சொத்தையும் அவரின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார்.
ஆனால், இறுதி காலத்தில் அவரை மதிக்காமல் வீட்டை விட்டு வெளியேற்றியதோடு அந்த நிறுவனத்திற்கும் உங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று கூறி அவரின் மகன் கௌதம் நோகடித்துவிட்டார். இதனால் வேறு வழியின்றி தற்போது, வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, பெற்றோர்களுக்காக கூறிக்கொள்கிறேன், உங்களின் கடைசி காலத்திற்காக பணம் சேர்த்து வைத்துக்கொண்டு மீதியை பிள்ளைகளுக்கு கொடுங்கள் என்று வேதனையோடு பேசியிருக்கிறார்.