‘நமக்காக நேரம் ஒதுக்குவது மிக முக்கியம்’… தனது கணவருடன் நேரத்தை செலவிடும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் ரீசென்ட் கிளிக்ஸ்…

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சொல்வதெல்லாம் உண்மை ‘நிகழ்ச்சி மூலம் மிகப் பிரபலமடைந்தவர். இந்நிகழ்ச்சியில் பிரச்சனைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமே இல்லை. இவர் நடுவராக இருந்து தீர்ப்புகளை வழங்கி பிரச்சனைகளை தீர்த்து வைப்பார்.

   

லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகையாக மட்டுமின்றி இயக்குனராகவும் பணியாற்றுகிறார். அவருடைய நடிப்பில் வெளியான ‘உச்சிதனை முகர்ந்தால்’ திரைப்படத்திற்காக இவருக்கு  தமிழக அரசின் மாநில விருது கிடைத்தது. இவருக்கு ஷ்ரதா , ஸ்ருதி, ஸ்ரேயா மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.

இவருடைய மகள் ஸ்வேதாவுக்கு திருமணமாகி  குழந்தைகள் இருக்கிறார்கள். மகள் ஸ்ரேயாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருபதுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சென்று சிகிச்சை அளித்த பின்னர் தற்பொழுது நலமாய் உள்ளார்.

திரையுலகில் எப்பொழுதும் பிசியாக இருக்கும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் தற்பொழுது தனது கணவருடன் தனிமையில் இருக்கும் அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகிறது.