மனிதர்களை தாக்க தொடங்கிய ரோபோக்கள்…. பலத்த காயம் அடைந்த என்ஜினீயர்…. மூடி மறைத்த டெஸ்லா…!

உலக அளவில் ரோபோக்களின் செயல்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதில், AI  எனப்படும் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களும் தயாரிக்கப்பட்டு வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, டெஸ்லா வாகன நிறுவன உரிமையாளரான எலான் மஸ்க், AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் பல ரோபோக்களை வாகன நிலையங்களில் வேலையில் ஈடுபடுத்தியுள்ளார்.

   

அதில் ஒரு ரோபோ தொழில்நுட்ப பழுது காரணமாக கட்டுப்பாட்டை இழந்திருக்கிறது. அப்போது வேலை செய்து கொண்டிருந்த பொறியாளரை தாக்கியுள்ளது. இதனால், அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த ரோபோவை கட்டுப்படுத்துவதற்கே பெரும் சிரமம் ஆகிவிட்டது.

இந்த சம்பவம் கடந்த 2021 ஆம் வருடத்தில் நடந்திருக்கிறது. எனினும் அதனை வெளியில் தெரியாமல் மறைத்து விட்டனர். இப்போது தான் இந்த விஷயம் வெளியில் தெரிய தொடங்கி இருக்கிறது. செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் சுய அறிவு கொண்ட ரோபோக்கள் எப்பொழுதுமே ஆபத்துதான் என்று கூறப்பட்டிருக்கிறது.