
நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நீங்காத வடுவை ஏற்படுத்திவிட்டது என்றே கூறலாம். தொடக்கத்திலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
கோப்பையை வென்று விடுவோம் என்று எதிர்பார்ப்பில் இருந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துவிட்டது. இன்று வரை இறுதி போட்டி குறித்து பேசாத ரசிகர்கள் இல்லை என்ற அளவிற்கு தற்போது வரை இணையதளங்களில் வீடியோக்களும், மீம்ஸ்களும் உலகக்கோப்பை குறித்து வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ரோகித் சர்மா உலக கோப்பையின் இறுதி போட்டியில் ஆட்டமிழக்கவில்லை என்றும் அவர் அடித்த பந்தை travis head சரியாக பிடிக்காமல் விட்டதை அம்பையர் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, மீண்டும் உலக கோப்பை நடத்தப்படலாம் என்று சில தகவல்கள் பரவி வருகின்றன.
எனினும் அந்த தகவலில் உண்மை இல்லை என்றும், தொடக்கத்திலிருந்தே இறுதி போட்டியில் பேட்டிங் மற்றும் பில்டிங் இரண்டிலும் ஆஸ்திரேலியா இந்தியாவை ஆதிக்கம் செலுத்தி உலக கோப்பையை வென்றுள்ளது என்பதே உண்மை என்றும் கூறப்பட்டிருக்கிறது.