கிரிக்கெட் கடவுள்னா சும்மாவா…? ரோட்டில் ரசிகரை துரத்தி சென்ற சச்சின்… வைரலாகும் வீடியோ…!

கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. கிரிக்கெட் என்றாலே அது சச்சின் தான் என்ற அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார். மைதானத்தில் அவர் என்ட்ரி  கொடுத்தாலே இந்திய அணி வெற்றி தான் என்ற அளவிற்கு நம்பிக்கையை விதைத்தவர்.

   

இந்நிலையில், சச்சின் தன் தீவிர ரசிகர் ஒருவரை பின்தொடர்ந்து சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் சச்சின் பெயர் கொண்ட ஜெர்ஸியை அணிந்து சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஒரு நபரை பார்த்தவுடன் காரில் பின் தொடர்ந்து சென்ற சச்சின், தன் டிரைவரிடம் அந்த ரசிகரை ஓரமாக நிற்க சொல்லுமாறு கூறியிருக்கிறார்.

அவரும் நிற்க, தன் காரின் கண்ணாடியை சச்சின் இறங்கியவுடன் அந்த நபர் இன்ப அதிர்ச்சியடைந்தார். கடவுளே என்று பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். சச்சின் அவரிடம் பேசி இருக்கிறார். அந்த நபர், தான் சேகரித்து வைத்திருக்கும் சச்சினின் புகைப்படங்கள், கையில் குத்திருந்த டாட்டூ போன்றவற்றையெல்லாம் காண்பித்திருக்கிறார்.

அனைத்தையும் மகிழ்ச்சியாக பார்த்த, சச்சின் அவரிடம் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். இந்த வீடியோவை சச்சின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar)