தமிழ்நாடு என்று பெயர் வைக்க.. தன் உயிரை மாய்த்த மாமனிதர்.. யாருக்காவது அவரை பற்றி தெரியுமா..?

முன்பு மெட்ராஸ் மாகாணம் என்று இருந்த பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்பதற்காக 1956-ஆம் வருடத்தில் 76 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து சங்கரலிங்கனார் என்பவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டார். அப்படி இருந்தும் மத்திய அரசிடமிருந்து பெயரை மாற்றுவதற்கான எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை.

   

10 வருடங்களுக்கு பிறகு, ஆட்சியில் அமர்ந்த அறிஞர் அண்ணா, அந்த சம்பவத்தை மனதில் வைத்து, முதல் கோரிக்கையாக எங்கள் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மெட்ராஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என இந்திய பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

ஆனால், பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் இப்போது தமிழ்நாடு என்று பெயரை மாற்றி என்ன சாதிக்கப் போகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதை பார்த்து, சிரித்திருக்கிறார்கள் அறிஞர் அண்ணாவின் பேச்சுத்திறனை அறியாதவர்கள்.

அடுத்த நொடியே, எழுந்து பாராளுமன்றம் என்ற  பெயரை லோக்சபா என்று மாற்றி நீங்கள் என்ன சாதித்தீர்கள்? என கேட்டு கூட்டத்தை வாய் அடைக்க வைத்து விட்டார் அறிஞர் அண்ணா. அதன்பிறகு, 1968-ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டுவிட்டது.