என்னா ஆட்டம்… தம்பிங்க படையோடு குத்தாட்டம் போடும் அண்ணி… இணையத்தை கலக்கும் வீடியோ…!

தமிழ் திரையுலகில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்த சீமான் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 1996 ஆம் வருடத்தில் வெளிவந்த பாஞ்சாலங்குறிச்சி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக களம் இறங்கினார்.

   

தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கிய இவர், பள்ளிக்கூடம், மாயாண்டி குடும்பத்தார் உட்பட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது அரசியலில் களமிறங்கி நாம் தமிழர் கட்சியை நிர்வகித்து வரும் இவர் குறித்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையதளங்களில் வெளியானால் உடனே வைரல் ஆகிவிடும்.

அந்த வகையில், தற்போது சீமானின் மனைவி கயல்விழி, பொங்கல் தினத்தன்று குத்து பாடல்களுக்கு நடனமாடி உற்சாகமாக பொங்கலை கொண்டாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.