இனி நடிகர் விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ண முடியாது… இயக்குனர் சேரன் காட்டம்… காரணம் இதோ..!!

இயக்குனர் சேரன்

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவில் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பாண்டவர் பூமி உள்ளிட்ட பல சிறந்த படங்கள் கொடுத்து முன்னணி இயக்குனராக இருந்த நிலையில், சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் இயக்கிய திரைப்படங்களுக்கு இயக்குனராக நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார். பின்னர் நான்கு தமிழ் நாடு பிலிம்ஸ் விருதுகளும், ஐந்து தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளையும் வென்றுள்ளார். இவர் 2019 ல் விஜய் டிவியில் நடந்த  பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக சென்றார்.

இயக்குநர் சேரன் போட்ட சபதம் - Director cheran Challenge | Indian Express Tamil

   

இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் எடுக்கப்போவதாக கூறிய நிலையில், அந்த படம் 5 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தொடங்கவில்லை.

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர்  விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி, 96 போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தற்போது பாலிவுட் வரை சென்று, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்தியில் ஹீரோவாக நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

இனி விஜய் சேதுபதியுடன் படம் பண்ண முடியாது: இயக்குனர் சேரன் காட்டம் | Cheran About Vijay Sethupathi Film

இனி முடியாது

இந்நிலையில் சேரன் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவரிடம் விஜய் சேதுபதியை வைத்து எப்போது படம் எடுப்பது பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் காட்டமாக பதில் கொடுத்திருக்கிறார். “பண்ணல.. அந்த படம் பண்ண முடியாது இனிமே. நிறைய காரணங்கள் இருக்கு. அவர் ரொம்ப உயர்ந்துவிட்டார். அவருக்காக கதை மாற்றப்படவேண்டும்.”

Birthday Special Farzi Actor Vijay Sethupathi Success Story How He Became Biggest South Actor And Producer | Vijay Sethupathi B'day: फिल्मों में आने से पहले विजय सेतुपति ने किया जबरदस्त संघर्ष, जानिए

“மேலும் அவர் ரொம்ப பிசியாக இருக்கிறார் என்றும் இன்னும் 10 வருஷத்துக்கு அவரது கால்ஷீட் கிடைக்காது. அதனால் இப்போதைக்கு அந்த படம் எடுக்க வாய்ப்பில்லை”. இவ்வாறு இயக்குனர் சேரன் கூறி இருக்கிறார்.