ரச்சிதா மகாலட்சுமி என் மீது பாலியல் புகார் கொடுக்க இவர் தான் காரணம் … மனம் உடைந்து பேசிய அவரது கணவர் தினேஷ்..!

ரச்சிதா மகாலட்சுமி – தினேஷ்

நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து புகழ்பெற்றார். இவர் தன்னுடன் நடித்த சக சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து  கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Rachitha Mahalakshmi-TAMIZHAKAM

   

இதனை தொடர்ந்து அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அண்மையில் இவர் தன்னுடைய கணவர் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார். அதில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தகாத முறையில் பேசுவதாகவும், பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுக்கிறார் என்றும் புகார் கொடுத்த  செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது.

ரச்சிதா கூறியது பொய்யா? விவாகரத்துதானே பெற்றுக்கொள்ளட்டும் - தினேஷ் பதிலடி! - தமிழ்நாடு

இந்நிலையில், இந்த புகாருக்கு ரச்சிதாவின் கணவர் விளக்கத்தை கொடுத்துள்ளார். அப்போது அவர் கூறியதில், ரச்சிதா என்னை பிரிய வேண்டும் என்று முடிவு செய்து, அதற்காக என் மீது ஏதாவது வழக்கு போட வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செய்தார்.

இவர் தான் காரணம்

மேலும் அவரின் வழக்கறிஞர் தான் இந்த புகார்களுக்கு காரணம் என்றும் இந்த மாதிரி சொன்னால் தான் வழக்கு கடினமாக இருக்கும் என்றும் அவர் பேச்சை கேட்டு இந்த புகார் கொடுத்தாக கூறியுள்ளார். பின் ரச்சிதா-வுடன் சேர்ந்து வாழ முடியும் என்ற நம்பிக்கை சுக்குநூறாக உடைந்து விட்டதால், நீதிமன்றத்தில் விவாகரத்து கோரினால் நான் விவாகரத்து கொடுத்து விடுகிறேன். இவ்வாறு மிகுந்த கவலையோடு மனம் உடைந்து பேசியுள்ளார்.

Rachitha Mahalakshmi News in Tamil | Latest Rachitha Mahalakshmi Tamil News Updates, Videos, Photos - Oneindia Tamil