காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய முத்தழகு சீரியல் நடிகை வைஷாலி…. காயங்களுடன் அவர் வெளியிட்ட வீடியோ இதோ…!!

வைஷாலி தனிகா

தமிழ் சினிமாவில் முக்கியமான சீரியல்களில் நடித்து, மிகவும் பிரபலமானவர்  நடிகை வைஷாலி தனிகா. இவர் விஜய் டிவியின் மாப்பிள்ளை, ராஜா ராணி மற்றும் சன் டிவியில் மகராசி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் ஜீ தமிழில் கோகுலத்தில் சீதை, நம்ம வீட்டு பொண்ணு போன்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வைஷாலி தனிகா, இதுவரை நடித்த சீரியல்களில் எல்லாம் பெரும்பாலும் நெகட்டிவ் ரோலில்தான் நடித்து வருகிறார்.

ஷாக்... கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பிய விஜய் டிவி நடிகை!

   

இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முத்தழகு என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சின்ன விபத்து

நடிகை வைஷாலி தனிகா தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, நான் தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த வளைவுகளில் கவனிக்காமல் ஓட்டுநர் காரை செலுத்தி விட்டார். இதனால் விபத்து ஏற்பட்டது. மேலும் நான் சீட்டு பெல்ட் போட்டு இருந்ததால் உயிர் பிழைத்தேன் என்றும் நான் சீட்டு பெல்ட் மட்டும் போடலைன்னா இது மேஜர் ஆக்ஸிடென்ட்டா ஆகியிருக்கும் என்று கூறியுள்ளார்.

Actress Vaishali Thaniga says this is my last birthday as a bachelor -  விஜய் டிவி சீரியல் நடிகை வைஷாலிக்கு திருமணம் ஃபீல் ஆகும் ரசிகர்கள் | Indian  Express Tamil

சீட்டு பெல்ட் மற்றும் ஏர்பேக் இந்த இரண்டும் தான் என்னுடைய உயிரை காப்பாற்றியது. எனவே நீங்கள் வளைவுகளில் மிகவும் மெதுவாக செல்லுங்கள் மற்றும் சீட்டு பெல்ட் அணியுங்கள். இவ்வாறு வைஷாலி கூறியுள்ளார். வீடியோ இதோ,