முதுகுத் தண்டுவட பிரச்சனையால் அவதிப்படும் சீரியல் நடிகை கல்யாணி… அவரே இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட எமோஷ்னல் tag….

சின்னத்திரை சீரியல்கள் மக்கள்  மத்தியில் மிகவும் பிரபலமானவர்  நடிகை கல்யாணி.’அள்ளித்தந்த வானம்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘ஜெயம்’ படத்தில் நடிகை சதாவிற்கு தங்கையாக நடித்திருந்தார்.   கல்யாணியின்  உண்மையான பெயர் பூர்ணிதா.’ஜெயம்’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்.  இவர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ ‘படத்திலும் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இவர்  குருவம்மா, ரமணா, போன்ற பல திரைப்படகளில்  குழந்தை நட்சத்திரமாக  நடத்துள்ளார்.சில படங்களில் இவர்  கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக  நடத்துள்ளார் கல்யாணி.

   

இவர் விஜய் டிவியின் தொகுப்பாளராக பணியாற்றினார்.  பீச் கேர்ள்ஸ், ஜூனியர் சீனியர், சூப்பர் மாம், போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில்  ஆங்கரிங்  பணிசெய்துள்ளார் .நடிகை கல்யாணி 2013 ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அதன் பிறகும் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.  பின்பு  இவர்  வெளிநாட்டில் செட்டில் ஆகிய தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்.இவருக்கு ஒரு மகள் உள்ளார்.சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில்  ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சி தொகுப்பாளராக ரீ என்ட்ரிகொடுத்தார்.

அதன் பிறகு  சில வருடங்களாக கேமரா பக்கம் காணவில்லை. ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் ஏதாவது பதிவுகளை போட்ட வண்ணம் இருந்தார்.தற்போது  இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த  ஒன்றே மாதமாக  உணர்வுப்பூர்வமாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் மோசமாக இருந்தது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை மிகவும் கடினமாக இருந்தது.2016 ஆம் ஆண்டு எனது முதுகு தண்டுவடம் தொடர்பான அறுவை  சிகிச்சை நடந்தது. அதன் பிறகு நலமாக இருந்து வந்தவர். கடந்த ஆறு மாதங்களுக்கும் முன் மீண்டும் பிரச்சனையா              ஆரம்பித்தது என்ற அதிர்ச்சியான தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி  வருகிறது

 

View this post on Instagram

 

A post shared by Kalyani Rohit (@kalyanirohit)