
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ’96’ என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பழைய நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேரும் காட்சியில் த்ரிஷா ஒரு பாட்டு பாடுவார். ’தென்றல் வந்து தீண்டும்போது’ என்ற அந்த பாடலின் காட்சி ஏற்கனவே எடுக்கப்பட்ட நிலையில், அதற்கு ஏற்ப உதட்டசைவுடன் நான் பாட வேண்டும் என இயக்குனர் என்னிடம் கேட்டுக் கொண்டதாக பாடகி சின்மயி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பொதுவாக பின்னணி பாடகிகள் பாடும் பாட்டுக்கு தான் நடிகைகள் உதடு அசைப்பார்கள், ஆனால் நான் த்ரிஷா நடித்த காட்சிக்கு ஏற்ப பாடினேன் என்று சமீபத்தில் பாடகி சின்மயி தன் சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Since ‘96 has re-released, one small thingibob I may not have shared about this scene where I sing the charanam of Thenral Vandhu.
I didn’t record it first for Trisha to lip sync during shoot, as is the norm with song shoots.
I sang over Trisha’s performance, matching to lip…
— Chinmayi Sripaada (@Chinmayi) February 18, 2024
அப்படி அவரது உதட்டு அசைவுக்கு பாடுவது பெரிய சவாலாக இருந்தது என்று சின்மயி தெரிவித்துள்ளார். மேலும் அது குறித்த வீடியோவை வெளியிட்டு இதை பார்த்தாலே நான் அவர் உதட்டு அசைவுக்கு ஏற்ப எப்படி பாடியிருக்கிறேன் என்பதை புரிந்து கொள்ள முடியும்” என்று தெரிவித்துள்ளார். அது வைரலாகி வருகிறது. வீடியோ இதோ,