
பொதுவாக, உடன் பிறந்த சகோதர சகோதரிகள் என்றாலே சிறு வயதில் சண்டை போட்டுக்கொள்வார்கள். விளையாட்டிலிருந்து சாப்பாடு வரை எதற்கெடுத்தாலும் சண்டை தான். ஆனால், அவர்களே பிரிந்து செல்லும் போது மனமுடைந்து அழுவார்கள். அவ்வாறு அக்கா, தங்கை திருமணங்களில் கண்கலங்கி அழும் சகோதரர்களின் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகும்.
அந்த வகையில், தற்போது தங்கை ஒருவர் தன் அக்கா திருமணத்திற்காக அவரை வாழ்த்தி பேசுகிறார். அதற்கு முன்பாக அக்காவை பிரியப்போகும் சோகத்தில் கண்கலங்கி அழுதுகொண்டே பேசுகிறார். அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.