
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. சமீப நாட்களாக அதில் கலந்து கொண்ட பலரின் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அவர்கள் எமோஷனலாக பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் நகைச்சுவையாக்கி மீம்ஸ்களாக போட்டு ட்ரெண்ட் ஆக்கிவிடுவார்கள் இணையதளவாசிகள்.
பலர் அவ்வாறு பிரபலமாகியிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது, மேடம் இது ஆக்சன் மேடம் என்ற வார்த்தை தான் இணையதளங்கள் முழுக்க கலக்கிக் கொண்டிருக்கிறது. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பேசிய ஒரு நபர், “மேடம் இது ஆக்சன் மேடம்” என்று கூறுவார்.
View this post on Instagram
அந்த வார்த்தை தான் இணையதளங்களில் ட்ரெண்ட் ஆகிவிட்டது. சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான லாரன்ஸ் என்ற நபரின் உண்மையான பெயர் விருமாண்டி என்று கூறப்பட்டிருக்கிறது. அவர் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்குபவர் என்று தெரியவந்துள்ளது.
அவரின் புகைப்படத்தை காண்பித்தால் அங்கே வேலை செய்பவர்கள் அனைவருமே, இவரின் பெயர் விருமாண்டி என்றும் அதிகமாக குடிப்பார் என்றும் கூறியிருக்கிறார்கள்.
View this post on Instagram