அட்வைஸ் என்ற பெயரில் அத்துமீறிய சிலர் ….பதிலடி கொடுத்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை நந்தினி…

சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியல் சூப்பர் ஹிட் ஆக ஒளி பரப்பாகும் சீரியல் எதிர்நீச்சல் .இந்த சீரியலானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது . இந்த சீரியலில் நந்தினி என்ற காதபத்திரத்தில்  நடிப்பவர் நடிகை ஹரிப்பிரியா  இசை. இவர் தற்போது இவர் ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அதில் அட்வைஸ் என்ற பெயரில் அத்துமீறியதை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

   

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் எனக்கு அட்வைஸ் கொஞ்சம் கூட பிடிக்காது அதற்கு காரணம் நாம ஒரு கஷ்டத்தில் இருக்கும் போது நமக்கு உதவி செய்யாதவர்கள் ஒரு சூழ்நிலைகள் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி அட்வைஸ் பண்ண தேவையில்லை.நான் எவ்வளவோ பிரச்சனைகளை தாண்டி தான் இந்த தூரம் வந்திருக்கிறேன்.

இதை நான் தலைகனமாக சொல்லவில்லை இத்தனை வருட பயணத்தில் நான் இங்கு சென்றால் இடுக்கும் அங்கு சென்றால் வலிக்கும் என்று படிப்படியாக கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். அதனால் இனிவரும் காலத்திலும் என்னை நானே பார்த்துக்கொள்வேன் எந்த அட்வைஸும் தேவையில்லை அதுபோல நானும்  யாருக்கும் அட்வைஸ் கொடுப்பதும் கிடையாது. எனக்கு , கர்மா நேரம் போன்றவற்றில் நம்பிக்கை இருக்கிறது. அது எல்லாம் நம்மை சில நேரங்களில் சுழற்றி விடுகிறது என்று மனம் திறந்து பேசி உள்ளார்.